CBSC 10TH 12TH EXAM RELATED NEWS: - HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |

Home Top Ad

Post Top Ad

https://t.me/joinchat/NY8iCBcU-6hUiJ817Gy1qg

Friday 23 June 2017

CBSC 10TH 12TH EXAM RELATED NEWS:

இந்த ஆண்டு சிபிஎஸ்சி 10 - 12ஆம் வகுப்புக்கான தேர்வுகள் ஒரு மாதம் முன்பே தொடங்குகிறது

ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 10 மற்றும் 12 ஆம் வகுப்பிற்கான பொதுதேர்வுகள் நடத்தப்படும். இதற்கான கால அட்டவணையை சிபிஎஸ்சி அறிவிக்கும். ஆனால் இந்த வருடம் தேர்வை பிப்ரவரி மாதமே நடத்த முயன்று வருகின்றனர்.
இது பற்றி சிபிஎஸ்சி அதிகாரிகள், இந்த வருடம் பொது தேர்வை பிப்ரவரி மாதம் நடத்த இருக்கிறோம்.   இதனால் பள்ளி மாணவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. ஏனெனில் மாணவர்கள் ஜனவரி மாதமே ஆயத்த தேர்வுக்கு தயாராகிவிடுகின்றனர்.இந்த முடிவுக்கு காரணம் பரீட்சை தாளை மதிப்பீடு செய்வதில் ஏற்படும் பிரச்சனையே  என தெரிவிக்கின்றனர்.மார்ச் மாதம் பரீட்சை நடைபெறும் போது கோடைகால விடுமுறையும்  சேர்ந்து வருகிறது. ஆசிரியர்கள் விடுமுறையில் சென்றுவிடுகின்றனர். இதனால் பரீட்சை தாளை திருத்துவதற்காக தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டியுள்ளது.இதனால் தேர்வு மதிப்பீட்டில் பிரச்சனை ஏற்படுகிறது. அதிகப்படியான மாணவர்கள் மறுமதிப்பீட்டலுக்கு விண்ணப்பிக்கின்றனர்.  2.47 சதவீதம் மாணவர்களிடமிருந்து மறுமதிப்பீட்டலுக்கான விண்ணப்பம் வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.மேலும் பிப்ரவரி 15இல் தேர்வு நடத்துவது தேர்வு மதிப்பீட்டில் பெரும் மாற்றத்தை கொண்டு வரும் என தெரிவிக்கின்றனர்.

இது பற்றி சிபிஎஸ்சி மூத்த அதிகாரி , தேர்வு மதிப்பீட்டலுக்கான வழிமுறையில் மாற்றம் கொண்டு வரப்படும். அதற்காக தனி குழு அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும் எவ்வளவு தான் ஆசிரியர்கள் முழு முயற்சியில் ஈடுபட்டு மதிப்பீடு செய்தாலும் அதனை கூட்டி கணிணியில் பதியும் போது தவறு ஏற்பட்டு விடுகிறது. இதனால் இத்தவறுகளை குறைக்கும் வகையில் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.சென்ற வருடத்தை விட இந்த வருடம் சிபிஎஸ்சி 12ம் வகுப்பு தேர்வு எழுதுபவர்களின் எண்ணிக்கை 2.82 சதவீதம் உயர்ந்துள்ளது.

மொத்தம் 11 இலட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். அதில் 6,38,865 பேர் ஆண்கள் மற்றும் 4,60,026 பேர் பெண்கள். 10,678 பள்ளி மாணவர்களுக்காக 3,502 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad